சென்னை: பஸ், ரெயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணம் - புதிய அறிவிப்பு

பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.;

Update:2024-05-14 11:21 IST

சென்னை,

சென்னையில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது போக்குவரத்தாக பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் வசதிகள் உள்ளன. இதில் இதுவரை மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது.

இந்த நிலையில் ஜூன் இரண்டாம் வாரம் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி மூன்று போக்குவரத்திலும் பயணிக்க வசதியாக பிரத்யேக கார்டு ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார்டில் ரீசார்ஜ் செய்து மக்கள் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்