சென்னை: நன்றாக படி என்று பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவர் தற்கொலை

அரும்பாக்கம் அருகே ஒழுங்காக படிக்க வேண்டும் என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.;

Update: 2022-08-17 10:39 GMT

போரூர்,

சென்னை, அரும்பாக்கம் வள்ளுவர் சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகன் அந்தோணி தினேஷ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். தினேஷ் நேற்று மாலை 4.45 மணி அளவில் வழக்கம் போல பள்ளி முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவனது பெற்றோர் கடைக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த தினேஷ் படுக்கையறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், வீடு திரும்பிய பெற்றோர் மகனை தேடும் போது அவர் படுக்கையறையில் தற்கொலை செய்து கொண்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் மாணவன் தினேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ் படிப்பில் சற்று மந்தமாக இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக ஒழுங்காக படிக்க வேண்டும் என்று கூறி அவனது பெற்றோர் தினேசை அடிக்கடி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்த தினேஷ் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்