சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயிலில் அக்டோபர் 2-ந்தேதி வரை முன்பதிவு முடிந்தது

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயிலில் அக்டோபர் 2-ந்தேதி வரை முன்பதிவு முடிந்தது.;

Update:2023-09-25 05:21 IST

சென்னை,

நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நெல்லையில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார். தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அமல்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

புதிய ரெயில் சேவை நேற்று தொடங்கப்பட்டதால் பயணிகள் இல்லாமல் ரெயில் இயக்கிப் பார்க்கப்பட்டது. நேற்று மதியம் 12.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

முன்பதிவு

இதைத்தொடர்ந்து, இன்று வழக்கம்போல் பயணிகள் ரெயில் சேவை தொடங்குகிறது. முதல் பயணிகள் சேவையாக சென்னை எழும்பூரிலிருந்து இன்று மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். அந்த வகையில், ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய நிலையில் எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்பதிவு செய்தனர். இதனால், வரும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரையில் சாதாரண ஏ.சி. சேர் கார் மற்றும் எக்சிகியூடிவ் சேர் கார் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

நாளை செவ்வாய்க்கிழமை இந்த ரெயில் சேவை கிடையாது என்பதால் மறுமார்க்கமாக 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு ரெயில் சேவை தொடங்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்