சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி
சென்னை சென்டிரல் - விமான நிலையம் இடையேயான நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை சென்டிரல் - விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் செல்ல ஆலந்தூர் மெட்ரோ சென்று பச்சை வழித்தடத்தில் மாறி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விம்கோ நகர் - விமான நிலையம், சென்னை சென்டிரல் - பரங்கிமலை இடையேயான மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்டிரல் - விமான நிலையம் இடையேயான நீல வழித்தட மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.