சென்னை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் பெயிண்டர் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2024-03-13 00:22 GMT

கோயம்பேடு,

சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 30). பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் நெற்குன்றம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வர்ணம் பூசும் வேலைக்கு சென்ற போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியின் ஆடையை களைந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஜெய்கணேசை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், அம்பத்தூர் அடுத்த சோழபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புத்தூர் பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான முருகன் (26) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்