சென்னை-காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரெயில் சேவை 9 நாட்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை-மதுரை வழித்தடத்தில் தேஜஸ் உள்ளிட்ட பல ரெயில்கள் பகுதியாகவும், மொத்தமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-09 17:04 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தண்டவாளத்தில் நடத்தப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் பிப்ரவரி 16,17, 20, 21, 23, 24, 27, 28 மற்றும் மார்ச் 3 ஆகிய 9 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை-மதுரை வழித்தடத்தில் தேஜஸ் உள்ளிட்ட பல ரெயில்கள் பகுதியாகவும், மொத்தமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளன. பாண்டியன் ரெயில், சிலம்பு ரெயில் ஆகியவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்