சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து: 2 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-07-03 05:31 GMT

சென்னை,

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மேலும், சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் பரவியதில் கோபிநாத், சதீஷ் என்ற இரண்டு 2 ஊழியர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்