சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம்

சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2024-09-09 23:22 GMT

கோப்புப்படம்

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* புதுச்சேரியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16116) வரும் 23, 27 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

* புதுச்சேரியில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் ரெயில் (06738) வரும் 27 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து காலை 5.25 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் ரெயில் (06737) வரும் 27, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

* தஞ்சாவூரில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் (06874) வரும் 10, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளிலும், திருவாரூரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் ரெயில் (06688) வரும் 11-ந்தேதி முதல் 15 தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

* மன்னார்குடியிலிருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் (06404) வரும் 11-ந்தேதி முதல் 15 தேதி வரையிலும், மறுமார்க்கமாக, மயிலாடுதுறையிலிருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மன்னார்குடி செல்லும் பயணிகள் ரெயில் (06403) இதே தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

* காரைக்காலில் இருந்து வரும் 11, 13, 15, 18, 20 முதல் 22, 24 முதல் 29 ஆகிய தேதிகளில் மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் ரெயில் (06739), அதற்கு மாற்றாக திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

* காரைக்காலில் இருந்து வரும் 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை, 17 முதல் 22, 24 முதல் 29 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் ரெயில் (06457), அதற்கு மாற்றாக திருவாரூரில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.

* விழுப்புரத்தில் இருந்து வரும் 23, 25 அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் காலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் ரெயில் (06891), அதற்கு மாற்றாக விருத்தாசலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

* விழுப்புரத்தில் இருந்து வரும் 23, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 5.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் ரெயில் (06028), அதற்கு மாற்றாக விக்கிரவாண்டியிலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும்.

* விழுப்புரத்தில் இருந்த வரும் 23, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16854), அதற்கு மாற்றாக வெங்கடேசபுரத்தில் இருந்து அதே நேரத்தில் புறப்பட்டு திருப்பதி செல்லும்.

* விழுப்புரத்தில் இருந்து வரும் 25, 27 அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் (06689), அதற்கு மாற்றாக திருத்துறையூரில் இருந்து காலை 6.19 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும்.

* மயிலாடுதுறையிலிருந்து வரும் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மதியம் 12 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16847), அதற்கு மாற்றாக குற்றாலத்தில் இருந்து மதியம் 12.13 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.

* காரைக்காலில் இருந்து வரும் 10, 12, 14, 17, 19 ஆகிய தேதிகளில் மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் ரெயில் (06739), அதற்கு மாற்றாக தஞ்சாவூரில் இருந்து மாலை 5.32 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

* சென்னை எழும்பூரில் இருந்து வரும் 25, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக, மதுரையிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக மதுரையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்.

* திருச்சியிலிருந்து வரும் 17-ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22676), அதற்கு மாற்றாக திருச்சியிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும்.

* திருச்செந்தூரில் இருந்து வரும் 22, 24, 26, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரெயில் (20606), அதற்கு மாற்றாக திருச்செந்தூரில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும்.

* நாகர்கோவிலில் இருந்து வரும் 22-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06012), அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும்.

* விழுப்புரத்தில் இருந்து வரும் 22-ந்தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் சிறப்பு ரெயில் (06131), அதற்கு மாற்றாக விழுப்புரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும்.

* விழுப்புரத்தில் இருந்து வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் ரெயில் (06689), அதற்கு மாற்றாக விழுப்புரத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்