செங்கல்பட்டு - காக்கிநாடா துறைமுகம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி மற்றும் என்ஜினியரிங் பணி நடைபெற இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;

Update: 2024-03-04 14:58 GMT

சென்னை,

ஆந்திரபிரதேசம் மாநிலம் நிடடவோல் - கடையம் வழித்தடத்தில் வரும் ஜுன் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 11-ந்தேதி வரையில் பராமரிப்பு பணி மற்றும் என்ஜினியரிங் பணி நடைபெற இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு ஆந்திரபிரதேசம் மாநிலம் காக்கிநாடா துறைமுகம் செல்லும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.17643) வரும் ஜுன் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் (17644) வரும் ஜுன் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 11-ந்தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்