முத்து மாரியம்மன் கோவில் தூக்குதேர் வெள்ளோட்டம்
வளையப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் தூக்குதேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
மோகனூர்
மோகனூர் அருகே வளையப்பட்டியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தூக்குதேர் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் பழைய தேர் மிகவும் சேதம் அடைந்து இருந்தது. இந்தநிலையில், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் புதிய தூக்கு தேரை செய்து முடித்தனர். தொடர்ந்து புதிய தூக்கி தேரின் வெள்ளோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக புனிதநீர் கொண்டு நிரப்பப்பட்ட கலசத்திற்கு பல்வேறு சிறப்பு யாகங்கள் செய்து, தேரில் வைத்து கட்டப்பட்டு சாமி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. வளையப்பட்டியை சேர்ந்த பக்தர்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.