அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.;
மேல்மலையனூர்:
மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.