எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-03 23:01 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16127) வருகிற 9 மற்றும் 11-ந் தேததிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும்.

மேலும் இந்த ரெயில்கள் சங்கனாச்சேரி, திருவல்லா மற்றும் செங்கனூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வருகிற 9-ந் தேதி மட்டும் கோட்டயம் வழியாக இயக்கப்படும். மேலும் இந்த ரெயில்கள் சங்கனாச்சேரி, திருவல்லா மற்றும் செங்கனூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்