செப்டம்பர் மாதம் 'சந்திரயான்-3' விண்கலம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ துணை இயக்குனர் தகவல்

‘சந்திரயான்-3’ திட்டப்பணிகள் மேம்பட்ட நிலையில் உள்ளதாக இஸ்ரோ துணை இயக்குனர் எஸ்.வி.சர்மா தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-29 14:48 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்ரோ துணை இயக்குனர் எஸ்.வி.சர்மா கலந்து கொண்டு 57 மாணவ, மாணவிகளுக்கு ஒரு கோடியே 4 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'சந்திரயான்-3' திட்டப்பணிகள் மேம்பட்ட நிலையில் உள்ளது என்றும், அந்த விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது என்றும் கூறினார். முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 117 செயற்கைக்கோள்கள் இதுவரை விண்ணில் ஏவப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இஸ்ரோவும் நாசாவும் இணைந்து தயாரித்து வரும் என்.ஐ. சார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்