9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

Update: 2023-12-25 11:25 GMT

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் 30-ந்தேதி (சனிக்கிழமை) வரை தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்