அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மழை காரணமாக தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Update: 2024-05-17 04:52 GMT

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், கரூர், செங்கல்பட்டு, கடலூர், சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்