அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-05 01:31 GMT

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், சிவகங்கை, சென்னை , நாகப்பட்டினம் , திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் , கரூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்