தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.;
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை மழை பரவலாக பெய்ததால் கடந்த 2 வாரங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.