தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-12-09 01:07 GMT

சென்னை

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 240 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 320 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்