சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி

தேனியில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.

Update: 2023-04-06 19:00 GMT

தமிழ்நாடு போலீஸ் துறைக்கு இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நேற்று நடந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 59 ஆண்கள், 13 பெண்கள் என மொத்தம் 72 பேர் பங்கேற்றனர். அவர்களின் சான்றிதழ்களை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நியமிக்கப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினர் சரிபார்த்தனர். அவர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. காலை 9 மணியளவில் தொடங்கிய சரிபார்ப்பு பணி இரவு 7 மணி வரை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்