66 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள்

பாலக்கோட்டில் ஜமாபந்தி நிறைவு விழா; 66 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் உதவி கலெக்டர் வழங்கினார்.;

Update:2022-06-22 20:28 IST
66 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள்

பாலக்கோடு

பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 313 மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் கலந்து கொண்டு 66 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் ராஜசேகரன், ரேவதி, துணை தாசில்தார் சத்யபிரியா, வட்ட வழங்கல் அலுவலர் குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்