கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்

கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2023-05-16 18:46 GMT

அரியலூர் மாவட்ட அளவிலான இலவச கோடை கால பயிற்சி முகாம், அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற்றது. முகாமில் கைப்பந்து, தடகளம், கூடைப்பந்து, ஆக்கி, கால்பந்து, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்றுனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கம் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பனியன்களை வழங்கினார்.

இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர்கள், விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் என 244 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், அரியலூர் ரஜாக் டிரேடிங் குழும ஜாபருல்லா, ஏ.எஸ்.மருத்துவமனை டாக்டர் முகம்மது ரியாஸ், பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்