கல்வி வளர்ச்சி நாள் விழா

பென்னாகரத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-07-22 16:41 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அளவிலான கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜகோபால், ராஜா அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் மணி கிருஷ்ணன் வரவேற்றார். இந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட உயர்நிலை, மேல்நிலை, தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், மற்றும் ஆசிரிய-ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும் போது, கல்வியின் அவசியத்தையும், கல்வியின் பெருமைகளையும், மாணவர்களுக்கு நீதிநெறி கல்வி போதிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்து கூறினார். மேலும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றுகளை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை கலெக்டர் அய்யப்பன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜெகன், தங்கவேல், அண்ணாதுரை, அன்புவளவன், தாசில்தார் அசோக்குமார், ஒன்றியக்குழு தலைவர்கள் ஏரியூர் பழனிசாமி, பென்னாகரம் கவிதா ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், மீனா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கீதா, கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர்கள் கல்வி வளர்ச்சி நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முடிவில் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்