மத்திய பல்கலைக்கழக புதிய பதிவாளர் பொறுப்பேற்பு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக புதிய பதிவாளர் பொறுப்பேற்பு ஏற்றுக்கொண்டார்.

Update: 2023-07-07 18:45 GMT

திருவாரூரை அடுத்த நீலக்குடி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக பேராசிரியர் திருமுருகன் பொறுப்பேற்பு கொண்டார். அரிடம் துணை வேந்தர் கிருஷ்ணன் முன்னிலையில் பொறுப்பு பதிவாளர் சுலோச்சனா சேகர் அனைத்து கோப்புகளையும் ஒப்படைத்தார். புதிய பதிவாளராக பொறுப்பேற்றுள்ள திருமுருகன் முன்னதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விலங்கியல் துறை தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்