சென்டிரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்டிரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து.;
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்டிரலில் இருந்து காலை 6.25 மணிக்கு திருப்பதி நோக்கி இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 16057) 28-ந்தேதி (நாளை) முதல் அக்டோபர் 12-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல அதே தேதிகளில், சென்னை சென்டிரல் இருந்து மதியம் 2.15 மணிக்கு திருப்பதி நோக்கி இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16053) மற்றும் சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு திருப்பதி நோக்கி இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16203) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.