திருப்பூர் தொழில் பூங்காவில் மத்திய ஜவுளித்துறை மந்திரி ஆய்வு

திருப்பூர் தொழில் பூங்காவில் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-06-26 10:47 GMT

திருப்பூர்:

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் நேதாஜி அப்பேரல் பார்க்கில் உள்ள தொழிற்பூங்காவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளித் துறை மத்திய மந்திரி பியூஷ் கோயல் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிற்சாலை இயங்கும் முறை, நவீன எந்திரங்களின் பயன்பாடு, தொழிலாளர்கள் நலன் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் தொழில் துறையினர் பலர் உடனிருந்தனர்.

இந்நிகழ்விற்க்கு பின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஏற்றுமதியில் மேக் இன் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ஏற்றுமதிக்கு திட்டமிடப்படுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. புதிய பெண் தொழில் முனைவோர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும்" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்