திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி முருகன் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-08-20 16:41 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வந்தார். அவருக்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவில் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

நேற்று காலையில் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சணாமூர்த்தி, பெருமாள், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக தூண்டிகை விநாயகர் கோவில் அருகில் உள்ள தனியார் மடத்தில் சத்ரு சம்ஹார யாகம் செய்தார்.

அவருடன், பா.ஜ.க. மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல.்ஏ., திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், கால்நடை பராமரிப்பு துறை தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் உதவி இயக்குனர் டாக்டர் செல்வகுமார், கால்நடை டாக்டர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்