அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய மருத்துவ குழுவினர் தர ஆய்வு
அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய மருத்துவ குழுவினர் தர ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரணி
அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய மருத்துவ குழுவினர் தர ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அக்ராபாளையத்தில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனை தேசிய உறுதி தர நிலை குழு டாக்டர்கள் சந்தோஷ்குமார் கடிலா, அகுவா மகேஸ்வர ராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர். புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம், பிரசவ அறை ஆகிய பிரிவுகளில் நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
தேசிய அளவில் செயல்படும் திட்டங்கள் செயல் முறைபடுத்துவது குறித்து அப்போது தர ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது மாவட்ட உதவி திட்ட மேலாளர் டாக்டர் ரமணன், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத், அக்ராபாளையம் டாக்டர் ஆனந்தன் மற்றும் மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், பணியாளர்கள் இருந்தனர்.