ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்படக்கூடாது - அமைச்சர் கருத்து
ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்படக்கூடாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில்கூறியதாவது:-
ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் தொடர்பாக 15 நாட்களுக்குள் மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டுள்ளது. அதை முழுவதுமாக நான் இன்னும் படித்துப் பார்க்கவில்லை. அதை படித்துபார்த்த பின்னர்தான் கருத்து சொல்ல முடியும்.
ஆன்லைன் ரம்மி தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆன்லைன் ரம்மி நிறுனங்களையோ, ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துகிறவர்களையோ பாதுகாக்கும் சட்டமாக இருந்துவிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்படக்கூடாது முழுமையாக ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம். அதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.