மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு கண்டனம்

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு கண்டனம்;காங்கிரஸ் விவசாய பிரிவு செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Update: 2023-07-24 18:45 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் தஞ்சை வடக்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ், மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன், சுவாமிமலை பேரூர் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து அமைத்துள்ள ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியை வரவேற்பது. வருகிற சுதந்திர தினத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி, கும்பகோணம் மாநகரில் முக்கிய வீதிகளில் காங்கிரஸ் கொடியேற்றுவது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்