குன்னத்தூர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

குன்னத்தூர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.;

Update:2022-07-25 22:18 IST

திருப்பூர், ஜூலை.26-

குன்னத்தூர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'கனடா நாட்டில் தணிக்கையாளர் வேலை வாங்கிக்கொடுப்பதாக திருப்பூரை சேர்ந்த கண்ணன் என்பவர், எங்களிடம் தலா ரூ.7¼ லட்சம் வாங்கினார். இதுபோல் 65 பேரிடம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் வேலை வாங்கிக்கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்.

இதுகுறித்து ஏற்கனவே மாநகர குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதுரை எங்கள் பணத்தை திருப்பிப்பெற்றுக்கொடுக்கவில்லை. கண்ணனின் பினாமி பெயரில் இருக்கும் சொத்தை பறிமுதல் செய்து எங்களுக்கு பணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்' என்றுகூறியுள்ளனர்.

குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ' குன்னத்தூர் பேரூராட்சியின் 13,14, 15 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது. குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது. பள்ளி அருகில் உள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்