எலக்ட்ரிக் கடை உரிமையாளரிடம் செல்போன் பறிப்பு; 3 பேர் கைது

போடியில் எலக்ட்ரிக் கடை உரிமையாளரிடம் செல்போன் பறித்து 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-08 17:13 GMT

போடி ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவகண்ணன் (வயது 40). இவர் வினோபாஜி காலனியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.  சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (22), ரஞ்சித்குமார் (20), சுப்புராஜ் நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் குமார் (19) ஆகிய 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சிவகண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ.500-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசில் சிவகண்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்