தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-08 13:54 GMT

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்து உள்ள பச்சிளம் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் திருமால்பாபு தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் பெருமாள்பிள்ளை மற்றும் டாக்டர் கார்த்தீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சரண்யா, ஏஞ்சலின், மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகத்தினர் இணைந்து ஊட்டச்சத்து உணவுக்கான கண்காட்சியை நடத்தினர்.

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தான உணவின் முக்கியத்தவத்தை எளிய முறையில் தெரிவித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

. நிகழ்ச்சியில் செவிலியர்கள், கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடத்தப்பட்டு ரோட்டரி சங்கத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்