காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பாவூர்சத்திரத்தில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;

Update:2023-05-14 01:15 IST

பாவூர்சத்திரம்:

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையொட்டி, பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பாவூர்சத்திரம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கே.பி.குமார் பாண்டியன் தலைமை வகித்து, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், மாவட்ட வர்த்த காங்கிரஸ் தலைவர். எம்.பி. சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. மாநில செயலாளர் வைகுண்ட ராஜா ஆகியோர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினர். கீழப்பாவூர் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், நகர தலைவர் குமரேசன் (எ) சிங்கக்குட்டி, வக்கீல் உமாபதி, கவுன்சிலர்கள் மேரி மாதவன், கனக ஜோதி தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்