தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கோவில்பட்டியில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கோவில்பட்டி:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளரும், நகரசபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.