உலக மீனவர் தினவிழா கொண்டாட்டம் கடலில் மலர் தூவி மரியாதை

குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் உலக மீனவர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மீனவர்கள் கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2022-11-21 18:45 GMT

குளச்சல், 

குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் உலக மீனவர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மீனவர்கள் கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விஜய் வசந்த் எம்.பி.

குமரி மாவட்டம் முழுவதும் ேநற்று உலக மீனவர் தின விழா பல்வேறு அமைப்புகள் சார்பில் கடற்கரைப் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் ராமன்துறை கடற்கரை கிராமத்தில் நேற்று காலையில் மீனவர் தின விழா நடந்தது. இதையொட்டி ராமன்துறை ஆலய அருேக கடற்கரையில் பங்குதந்தை சகாய வில்சன் தலைமையில் திருப்பலி நடந்தது.

தொடர்ந்து கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேசிய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு கடலில் மலர் தூவி, பால் ஊற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் பிரெடி கென்னடி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் ஷேக் முகமது, அருள்ராஜ், சுனில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பால்மணி, ஆரோக்கியராஜ், கிள்ளியூர் தொகுதி மனித உரிமைத்துறை தலைவர் ராஜகிளன், புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், மீனவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஷீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி ஏழை மீனவ பெண்களுக்கு குடைகள், மீன் விற்கும் பாத்திரங்கள், அரிசி மற்றும் பல நலத்திட்ட உதவிகளை விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்.

குளச்சல்

குளச்சல் கடற்கரையில் உலக மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மீனவர்கள் கடற்கரையில் திரண்டு கடலில் மலர் தூவி பிராத்தனை செய்தனர். காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை டைனிசிஸ் பிராத்தனை செய்தார். நிகழ்ச்சியில் விசை படகு சங்க தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் வர்கீஸ், செயலாளர் பிராங்கிளின், காணிக்கை மாதா ஆலய உதவி செயலாளர் ரெக்சன், வியாபாரிகள், ஏலக்காரர்கள் மற்றும் விசைப்படகு சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி விசைபடகுகள், வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

பிரின்ஸ் எம்.எல்.ஏ.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட மீனவர் அணி தலைவர் ஸ்டார்வின் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம் மற்றும் நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர், முனாப், யூசுப்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குளச்சல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் குளச்சல் மீன் பிடித்துறை முகத்தில் உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆய்வாளர் லிவின் மேரி முன்னிலை வைத்தார்.

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

நிகழ்ச்சியில் விசைப்படகு சங்கத் தலைவர் பிரான்சிஸ், துணைத் தலைவர் வர்க்கீஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் அந்திரியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி களிக்காவிளை மலங்கரை கத்தோலிக்க கல்லூரி மாணவ- மாணவிகள் கடற்கரை மற்றும் மீன் பிடித்துறை முகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினர்.

----------

(படங்கள் உண்டு)

Tags:    

மேலும் செய்திகள்