உண்மையான சமூக நீதி நாளாக பிரதமர் மோடி பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் புகழாரம்

உண்மையான சமூக நீதி நாளாக பிரதமர் மோடியின் பிறந்த நாளை இன்று கொண்டாடி வருவதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

Update: 2022-09-17 11:37 GMT

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம் மற்றும் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் மெமோரியல் பள்ளியில் இருந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் 'கடற்கரையில் மாபெரும் தூய்மை பணி' நிகழ்வில் கலந்து கொண்ட அவர், பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை மந்திரி எல்.முருகன், 2047ல் நமது நாடு மிகப்பெரிய வளர்ச்சி நாடாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று முதல் 2 வாரங்கள் சேவை வாரமாக கொண்டாடப்படுவதாகவும், கடற்கரையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த பணியை துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், உண்மையான சமூக நீதி தலைவராக பிரதமர் மோடி விளங்குவதாக தெரிவித்த அவர், உண்மையான சமூக நீதி நாளாக பிரதமர் மோடி பிறந்த நாளை இன்று கொண்டாடி வருவதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்