குறுவட்ட விளையாட்டு போட்டிகள்:செக்காரக்குடி அரசு பள்ளிமாணவர்கள் சாதனை

ஸ்ரீவைகுண்டம் குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் செக்காரக்குடி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;

Update:2023-08-15 00:15 IST

ஸ்ரீவைகுண்டம்:

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்ரீவைகுண்டம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வல்லநாடு சாரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் டென்னிஸ் பிரிவில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தனர். வாலிபால் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தனர். இதேபோல பூப்பந்து பிரிவில் 14 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தனர். மேலும் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மூன்று மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர் பொன் முத்து, உடற்கல்வி ஆசிரியர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்