கீழமூவர்கரை கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

கீழமூவர்கரை கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2022-10-03 19:00 GMT

திருவெண்காடு அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், அதே ஊரில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கண்காணிப்பு கேமராவும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிராம பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். இதில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் சரளா கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்