கால்நடைத்துறை அதிகாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
தூத்துக்குடியில் கால்நடைத்துறை அதிகாரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரத்தில் கால்நடை ஆஸ்பத்திரியில் கால்நடைத்துறை உதவி டாக்டராக பணியாற்றி வந்தவர் சத்யா (வயது 29). இவரை கால்நடைத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜோசப்ராஜ் என்பவர் சாதி ரீதியாக திட்டி, துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்யா தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ஆணையம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் உதவி இயக்குனர் ஜோசப்ராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.