பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-29 17:14 GMT

கரூர் மாவடியான் கோவில் தெருவில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதன் குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன், சண்முகம், சக்திவேல், ஜீவானந்தம், பரமசிவம ஆகிய 5 பேரும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து அந்த 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்