170 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கு:தம்பதிக்கு 10 ஆண்டு ஜெயில்

170 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் தம்பதிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-09-06 01:58 GMT


170 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் தம்பதிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கஞ்சா

கடந்த 2021-ம் ஆண்டில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மதுரை ஒத்தக்கடை பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் 170 கிலோ கஞ்சா பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த காளை (வயது 60), அவரது மனைவி பெருமாயி (45), அய்யர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

10 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் முதன்மை சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் தங்கேஸ்வரன் ஆஜரானார்.

விசாரணை முடிவில், காளை மற்றும் அவரது மனைவி பெருமாயி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமலச் செல்வன் நேற்று தீர்ப்பளித்தார். அய்யர் என்பவர் விடுதலை செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்