அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 31-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கை வரும் 31-ந்தேதிக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.;
விழுப்புரம்,
கடந்த 2006-11 காலகட்டத்தில் பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வரும் 31-ந்தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.