கடலூரில் அரசு கல்லூரி உதவி பேராசிரியை மீது தாக்குதல் அலுவலக உதவியாளர் மீது வழக்கு

கடலூரில் அரசு கல்லூரி உதவி பேராசிரியை மீது தாக்கிய அலுவலக உதவியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-04-07 18:45 GMT

கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் காஞ்சனா தேவி (வயது 43). இவர் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காஞ்சனா தேவி, அதே கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் புதுப்பாளையத்தை சேர்ந்த சித்தார்த்தி (42) என்பவருக்கு சிபாரிசு செய்து வங்கியில் ரூ.7 லட்சம் கடன் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே வங்கியில் வாங்கிய கடனுக்கு மாத தவணையை சித்தார்த்தி சரியாக செலுத்தாதது பற்றி அறிந்த காஞ்சனா தேவி, அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சித்தார்த்தி, அவரை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காஞ்சனா தேவி, கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சித்தார்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்