கார், பொருட்களை சேதப்படுத்திய 11 பேர் மீது வழக்கு

திருவாடானையில் வீட்டுக்குள் புகுந்து கார், பொருட்களை சேதப்படுத்திய 11 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-03-09 18:45 GMT

தொண்டி,

திருவாடானை பாரதி நகரில் வசித்து வருபவர் வீரையா (வயது 70). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவர் சம்பவத்தன்று வீட்டில் இருக்கும்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா வேட்டனூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராம்கி (வயது 31). மற்றும் அடையாளம் தெரிந்த 10 பேர் முன்விரோதம் காரணமாக இவரது வீட்டுக்குள் நுழைந்து கையில் கொண்டு வந்த கல், கம்பு மற்றும் அரிவாளால் வீட்டு வாசலில் நின்ற கார் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று டி.வி. பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை உடைத்தும் வீரையா மற்றும் அவரது மகன் மனோஜ் பிரபாகரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

இது குறித்து வீரையா திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது சைபுல் ஹிசாம் மற்றும் போலீசார் ராம்கி மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராம்கியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்