பட்டாசு பதுக்கிய பெண் மீது வழக்கு
பட்டாசு பதுக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
சாத்தூர் பகுதியில் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளிலும், அனுமதி பெறாத கட்டிடங்களிலும் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சாத்தூர் உட்கோட்ட போலீஸ் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மேட்டமலை பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் பட்டாசு கடை நடத்தி வரும் மகேஸ்வரி என்ற பட்டாசு வியாபாரி, தனது கடைக்கு தேவையான பட்டாசுகளை அதே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் மகேஸ்வரியின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளில் அரசால் தடை செய்யப்பட்ட 100-க்கும் அதிகமான சரவெடிகள் இருந்தது.