நகரசபை தலைவர், கவுன்சிலர்கள் மீது வழக்கு

செங்கோட்டை நகரசபை தலைவர், கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-05-11 19:00 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு குறித்த ஆலோசனை கூட்டம், ஆணையாளர் ெஜயப்பிரியா தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி தலைவர் ராமலட்சுமி பங்கேற்காமல், அலுவலகத்தில் உள்ள தனது அறையில் இருந்தார்.

அப்போது அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள், தலைவர் பங்கேற்காமல் கூட்டத்தை நடத்தக் கூடாது என்றும், தங்களது வார்டுகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தனர். பின்னர் அவர்கள், தலைவர் ராமலட்சுமியின் அறைக்கு சென்று முறையிட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் ராமலட்சுமி அளித்த புகாரின்பேரில், கவுன்சிலர்கள் சுடர் ஒளி, முத்துபாண்டி, ராம்குமார் ஆகியோர் மீதும், கவுன்சிலர் சுடர் ஒளி அளித்த புகாரின்பேரில், தலைவர் ராமலட்சுமி மீதும் செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்