இருதரப்பினர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே காதல் விவகாரத்தில் நடந்த மோதலில் இருதரப்பினர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-06-19 18:06 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி காந்திநகரைச் சேர்ந்தவர் ராமர் (வயது 50). இவரது மகன் பிரத்திஉனன். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்து உள்ளார். இவரது காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், பிரத்திஉனன் வீட்டுக்கு சென்று அவர்களை தாக்கி, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. பெண்ணின் வீட்டினர் கொடுத்த புகாரின் பேரில் காதலன் வீட்டார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்