நிலத்தகராறு 8 பேர் மீது வழக்கு
ரிஷிவந்தியம் அருகே நிலத்தகராறு 8 பேர் மீது வழக்கு
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் அருகே உள்ள பல்லவாடி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை குடும்பத்திற்கும், அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை குடும்பத்திற்கும் நில பிரச்சினை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் ஏழுமலை மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மனைவி வசந்தா, மூர்த்தி, மணி, இவரது மனைவி சுகன்யா ஆகியோர் மீதும், அண்ணாமலை மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் மாணிக்கம் மகன் ஏழுமலை, இவரது மனைவி லதா, மகன் அருண், சரவணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.