போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி-5 பேர் மீது வழக்கு

போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி-5 பேர் மீது வழக்கு

Update: 2022-11-20 20:50 GMT

திருமங்கலம்

மதுரையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 54). இவரது பெரியப்பா மகன் ராஜாங்கம் (60). இருவரது தந்தையின் பெயர்கள் பொன்னுசாமி. இதில் செல்வகுமார் தந்தை ஆசிரியர் என்பதால் ஆசிரியர் பொன்னுசாமி என அடையாளம் கூறியுள்ளனர். இவர்களது பூர்வீக நிலம் 5 ஏக்கர் திடியன் அருகேயுள்ள பொருப்பு மேட்டுபட்டியில் உள்ளது. இதனை பங்கு பிரித்துள்ளனர். இந்த நிலையில் ராஜாங்கம் தனது தந்தை மற்றும் சித்தப்பா பெயரின் ஒற்றுமையை பயன்படுத்தி செல்வகுமாருக்கு சொந்தமான 2.5 ஏக்கா் நிலத்தினை போலி ஆவணம் மூலமாக அபகரித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த செல்வகுமார் கொடுத்த புகாரில் சிந்துபட்டி போலீசார் ராஜாங்கம், அவரது மனைவி மற்றும் சகோதரி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்