நடன கலைஞரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

நடன கலைஞரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-03 18:46 GMT

கரூர் ராயனூர் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் லிவிங் (வயது 22). நடன கலைஞர். இவர் கடந்த 31-ந்தேதி நடைபெற்ற கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழாவை பார்வையிட்டார். பின்னர் அமராவதி ஆற்றின் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்டினம் ஒன்றில் ஏறுவது தொடர்பாக லிவிங்க்கும், கரூரை சேர்ந்த கவின், நவீன், லிங்கமாணிக்கம் ஆகியோருக்கும் இடையே ராட்டினம் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது லிவிங்கை, கவின், நவீன், லிங்கமாணிக்கம் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கரூர் டவுன் போலீசார் கவின், நவீன், லிங்கமாணிக்கம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்